சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது கட்டாயமில்லை – உயர்நீதிமன்றம் கருத்து!

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் ஜெகதீஸ்வரன், அதிமுக சட்டப்பேரவை கொறடா வேலுமணி ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது எனவும், பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தின்படி கட்டாயம் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.

அப்போது, சபாநாயகருக்கு உத்தரவிட அரசியலமைப்பு சட்டம் தடைவிதிக்கவில்லை என எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இ-விதான் என்ற செயலி மூலம் நேரடியாக ஒளிபரப்பலாம் எனவும், பல சட்டப்பேரவைகளிலும் இந்த செயலி மூலம் நேரடியாக நிகழ்வுகள் ஒளிபரப்புகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஆளும்கட்சியினர் பேசும்போது நேரலை செய்யப்படுவதாகவும், எதிர்கட்சியினர் உள்ளிட்டோர் பேசும்போது நேரலை துண்டிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவை ஒளிபரப்பின்போது இருட்டடிப்பு செய்வதை நிரூபிப்பதாக கூறி வேலுமணி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால், இவ்வழக்கின் விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours