செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!

Spread the love

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு மழை குறைந்ததால், நீர் வரத்தும் குறைந்து நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் தற்போது நீர்வரத்து 2,800 கன அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.74 அடி ஆகவும், மொத்த கொள்ளளவு 2,792 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஏரியின் பாதுகாப்பு கருதி, ஏரிக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

புயல் காரணமாக நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் ஏரிக்கு வரும் நீரை அப்படியே திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே அடையாறு ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours