சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் நடத்தப்படும் இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான திமுக இளைஞரணி தொண்டர்கள், நிர்வாகிகள் சேலத்தில் குவிந்துள்ளனர்.
பிரமாண்டமாக மாநாட்டு பந்தல், கட்-அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை மாநாட்டு திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கட்சியின் கொடியேற்றி வைத்தார்.
அப்போது, கே.என்.நேரு, துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் எம்.பி-க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் உள்பட திமுக முக்கிய நிர்வாகிகள் கூடியிருந்தனர்.
தொடர்ந்து மாநாட்டு பந்தலை சி.வி.எம்.பி.எழிலரசன் திறந்து வைத்தார். கலைஞர் 100 விழாவை முன்னிட்டு 100 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இதில், 16 அடி அகலம், 26 அடி நீளத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து விழா மேடைக்கு தலைவர்கள் வரத் துவங்கியுள்ளனர்.
முன்னதாக திடலில் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
+ There are no comments
Add yours