அதீத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் ஜனவரி 2 ம் தேதியன்று பள்ளிகள் திறக்கும்போது அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ள அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 2ல் பள்ளிகள் திறந்ததும் அன்று முதல் நடத்தப்படும். மேலும் மழை, வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு நகல் சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2 முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.
இது தவிர மாநிலம் முழுவதும் உள்ள 6 முதல் 9ம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours