புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வர்கோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. கோட்டாச்சியர் உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டியில் 746 காளைகள் மற்றும் 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
போட்டியின் முதல்சுற்றில் இதுவரை 7 பேர் காயமடைந்துள்ளனர். 7 பேரில் படுகாயமடைந்த ஒருவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
+ There are no comments
Add yours