தமிழ்நாட்டை தனித்தீவாக நடத்தினாலும், முன்னேறிய தீவாக இருப்போம் என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு, இன்று சென்னை கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில்700 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா சென்னை – வேப்பேரி, ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு, சிறப்புரையாற்றி, 700 மகளிருக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டை தனித்தீவாக நடத்தினாலும், அப்போதும் நாம் முன்னேறிய தீவாக இருப்போம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல லட்சம் கோடி முதலீடு வந்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நாம் இருக்கிறோம். அதற்கு காரணம் திமுக, பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பிற்கான திட்டங்களை உருவாக்கி, தன்னம்பிக்கை பெருகியவர்களாக மாற்றியிருப்பதின் மூலம் தமிழகம் முன்னணியில் இருக்கும் வாய்ப்பு உருவாக்கியுள்ளது.” என்றார்.
+ There are no comments
Add yours