தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. முன்னதாக, திமுகவின் தேர்தல் அறிக்கையில், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்று முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோதே, முதல்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து, 2022, 2023-ம் ஆண்டுகளிலும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் பொது பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேளாண் துறைக்கான 4-வது பட்ஜெட்டை பேரவையி்ல் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை தாக்கல் செய்கிறார்.
வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகள் மட்டுமின்றி, கூட்டுறவு, உணவுத்துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 2024-25ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு ஆகியவை நிறைவேற்றப்படும். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும்.
+ There are no comments
Add yours