‘அயோத்தியில்’, வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனால்விரதம் இருக்கும் பிரதமர் மோடி, ராமர் தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இதன்தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வந்தடைந்த அவர், தரிசனத்தை முடித்து விட்டுஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார்.
பின் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு தனது உடைமைகளை வைத்து, அக்னி தீர்த்த கடலில் குளிக்க சாலை மார்க்கமாக சென்றார். அங்கு அவருக்கு சாலையின் இருமருங்கிலும்கூடியிருந்த பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின், கோயிலின் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் அக்னி தீர்த்த கடலுக்கு பிரதமர் மோடி சென்று, நீராடினார். பின், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி சந்நிதானத்தில் அமர்ந்து மனம் உருகப் பிரார்த்தனை செய்தார்,பிரதமர் நரேந்திர மோடி. பின்சுற்றுப்பிரகாரத்தில் அமைதியாக வலம் வந்தார், பிரதமர் மோடி. அப்போது தனது உடல் முழுக்க காவித்துண்டினைஅணிந்திருந்த பிரதமர் மோடி, ருத்ராட்ச மாலைகளை அணிந்திருந்தார்.
பின் கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராமாயண பஜனை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
+ There are no comments
Add yours