தைப்பூசம் வாழ்த்து தெரிவித்த சீமான் !

Spread the love

முருகப் பெருமானுக்கு உரிய சக்திவாந்த முக்கியமான விரதங்களில் ஒன்றாக தைப்பூசம் கருதப்படுகிறது.

ஜனவரி 25-ம் தேதி இன்று தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து தான் நாம் தைப்பூசமாக கொண்டாடுகிறோம்.

இந்த தைப்பூச நாளில் விரதமிருந்தால் கேட்ட வரத்தை முருகன் தந்தருள்வார் என்பது ஐதீகம்.

இந்த நன்னாளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையயில் ,தைப்பூச விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..

தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழ் இறையோன், முப்பாட்டன் முருகப் பெருமான் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகத் திருநாள் இன்று!

ஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல் என

வாழ்வியல் கூறுகள் வழி மொழி தந்த தொன்ம இலக்கியம் என யாவும் பெற்று புவி மாந்தரில் கோலோச்சிய இனம் தொல்தமிழ்ப் பேரினம்.

அத்தகைய பண்பாட்டு செழுமைமிக்க தமிழினத்திற்கு தனித்த பெருமையுடைய இறையோனும் இருக்கிறார்.

அவரே தமிழர் இறையோன் நமது மூதாதை முருகப் பெருமான் ஆவார்.

‘பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகை காட்டும் முதுமொழியின்படி தொல்தமிழர் தங்கள் வாழ்வியல் பாடுகளின் மூலம் பெற்ற பண்பட்ட அனுபவங்களே தமிழர் பண்பாடாகியது.

அப்படி நமதுமூத்தோர் வழி பயணப்படுவது, மூத்தோர் வழி பாடுபடுவதே தனித்துவமிக்க தமிழர் மெய்யியல் வழிபாடாகும்.

அத்தகைய தமிழர் மெய்யியல் பண்பாட்டு நிகழ்வு மேலும் சிறப்புறும் வகையில் திருமுருக வழிபாட்டுத் திருநாளான தைப்பூச பெருவிழா உலகெங்கும் தமிழர்
வாழும் நிலங்களில் எல்லாம்,

தமிழர் குடும்பங்களில் எல்லாம் கொண்டாடி தமிழ் இறையோன் குறிஞ்சி நிலத்தலைவன் முப்பாட்டன் முருகப் பெருமானை வணங்கிப் போற்றுவோம்.

உலகத் தமிழர் அனைவருக்கும் அருள்நிறை அன்புடன் திருமுருகத் திருநாள் வாழ்த்துகள்!


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours