நீர் மேலாண்மை குறித்த அகில இந்திய செயலாளர்களின் இரண்டு நாள் மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தொடங்கியது.
ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நீர் இயக்கம் “நீர் தொலைநோக்குப் பார்வை @ 2047 – முன்னோக்கிய பயணம்” என்ற தலைப்பில் அகில இந்திய செயலாளர்கள் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அகில இந்திய செயலாளர்கள் மாநாடு இன்று காலை தொடங்கியது.
நீர் மேலாண்மை மற்றும் நீரின் தரம், பருவநிலை பின்னடைவுகள் மற்றும் நதிகளின் தூய்மை நிலை, நீர் பயன்பாட்டு திறன், நீர் சேமிப்பு, மக்கள் பங்கேற்பு ஆகிய ஐந்து முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
மேலும் போபாலில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற “முதல் அகில இந்திய மாநில அமைச்சர்கள் மாநாட்டில்” பரிந்துரைக்கப்பட்ட 22 பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர்கள், பல்வேறு மாநிலங்களின் நீர்வளத்துறைச் செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
+ There are no comments
Add yours