மின் தேவையை பூர்த்தி செய்வதில், சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துமாறு, அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதை பின்பற்றி, அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டு, பசுமை மின்சாரத்திற்கு முன்னுரிமை தரப்படுகிறது.
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை சார்பில் பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. 2023 டிச., 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் உள்ள சூரியசக்தி, காற்றாலை, சிறிய நீர் நிலையங்களின் மின் உற்பத்தி நிறுவு திறன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் 24,120 மெகாவாட் நிறுவு திறனுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து குஜராத் மாநிலம் 21,977 மெகாவாட் நிறுவு திறனுடன் இரண்டாவதாக உள்ளது.
அதற்கு அடுத்த மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 10,429 மெகா வாட் காற்றாலை; 7,360 மெகா வாட் சூரியசக்தி; 123 மெகா வாட் சிறிய நீர் நிலையம்; 1,045 மெகா வாட் சர்க்கரை ஆலை உட்பட, ஒட்டு மொத்தமாக பசுமை மின்சார நிறுவு திறன், 18,957 மெகா வாட் உடன், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கர்நாடகா, நான்காவது இடத்திலும், மகாராஷ்டிரா ஐந்தாவது இடத்திலும் உள்ளன. நாடு முழுதும் காற்றாலை, 44,736 மெகா வாட்; சூரியசக்தி, 73,318 மெகா வாட்; சிறிய நீர் மின் நிலையம், 4,987 மெகா வாட் என, மொத்தம் 1.34 லட்சம் மெகா வாட் நிறுவு திறன் உள்ளது.
+ There are no comments
Add yours