மதுரை எலியார்பத்தியில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காளை குத்தி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் மாடுகளை அலங்கரித்து, பூஜை செய்து அவற்றிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல், புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் விளையாட 3677 காளைகளும், 1412 மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் வளையாங்குளம் பகுதியை அடுத்தஎலியார்பாளையத்தில் மஞ்சு விரட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு, காளைகள்அவிழ்த்துவிடப்பட்டது. அப்போது, ரமேஷ் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று காளை ஓட்டத்தைப்பார்த்துக்கொண்டிருந்தார். சாலையில் வேகமாக ஓடிய காளை ஒன்று, அந்த சாலையிலேயே நின்றது. அப்போது, அந்த வழியாக வந்த லாரி, ஹார்ன் அடித்துள்ளது. இதனால், மிரண்டு போன அந்த காளை, வீட்டின் வாசலில்நின்றிருந்த ரமேஷை முட்டி தூக்கி வீசியது. இதில் ரமேஷின் இடது மார்பில் படுகாயம் ஏற்பட்டது.
காளை முட்டி உயிரிழந்த ரமேஷ்
இதையடுத்து, அவர் உடனடியாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் ரமேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகதெரிவித்தனர்.
கட்டிடத் தொழிலாளியான ரமேஷுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, தற்போது 1 வயதில் பெண் குழந்தைஒன்றும் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகக் கூடக்கோயில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மஞ்சுவிரட்டின் போது காளை முட்டி, இளைஞர் பலியான சம்பவம்அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours