நீலகிரி மாவட்டம், கூடலூரில் மாவட்ட நிர்வாகம் சார்ப்பில், 100 வயது கடந்த முதியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அம்மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் முதியவர்கள் பல கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டார். பின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதியவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். அவர்களிடம் நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் முதியவர்களுக்கு புத்தாடை வழங்கி கவுரவித்தார்.
அதன்பின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதியவர்கள் சிலர், ‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா…?’ என்ற பாடலுக்கு குதூகலமாக நடனமாடினார். முதியவர்களின் நடனத்தை பார்த்த அனைவரும் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அருணா அவர்களும், முதியவர்களின் நடனத்தை பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது ஆட்சியர் அருணா திடீரென கதறி அழ தொடங்கினார். இதனை பார்த்த சுற்றியிருந்தவர்கள் ஆட்சியரை சமாதானப்படுத்தினர். ஆட்சியர் கண்கலங்கிய சம்பவம் மற்றும் முதியவர்களின் நடனம் அந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட மற்றவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
+ There are no comments
Add yours