திமுக மகளிரணி மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த், சட்டமன்றஉறுப்பினர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி..
சென்னையில் வரும் 14-ம் தேதிதிமுக மகளிரணி மாநாடு நடைபெறஉள்ளது. அதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க சென்னை வருகின்றனர். அவர்களை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்வது குறித்து விவாதிக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,காவிரி பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது நாங்கள்தான். கர்நாடக காங்கிரஸ் அரசு உரிய நீரை வழங்காததை தமிழ்நாடு காங்கிரஸ் கண்டித்தது. காங்கிரஸ் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், பாஜகவை சேர்ந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு எதிராக தான் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்.
+ There are no comments
Add yours