தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பச்சேரி என்கின்ற கிராமத்தில் வருகின்ற 20 -ம் தேதி நடைபெற உள்ள ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நிகழ்ச்சிக்கும், அதே சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நெற்கட்டும்செவல் பகுதியில் நடைபெற உள்ள பூலித்தேவரின் 308-வதுபிறந்தநாள் நிகழ்ச்சிக்கும், ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து சுதந்திர போராட்ட வீரர்களான பூலித்தேவர்க்கும், ஒண்டிவீரர்க்கும் மரியாதை செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சி 20-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணி முதல் வருகின்ற 21-ஆம் தேதி காலை 10 மணி வரை தென்காசி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வருகின்ற 30-ஆம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2 -ம் தேதி காலை 10 மணி வரை தென்காசி மாவட்டம் முழுவதும் 144 உத்தரவு தடை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மரியாதை செலுத்த வரும் நபர்கள் நான்கு நபர்களுக்கு மேல் கூட்டம் கூடாமல் நான்கு நபர்கள் மட்டும் வருகை தந்து மரியாதை செலுத்தி விட்டு செல்லுமாறு தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்க்கு ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours