திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி வட்டம் பெரிய பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முனவர்பாட்சா (26). இவர், திருப்பத்தூர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார்.
அம்மனுவில் கூறியிருப்ப தாவது, “வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டி எனது குடும்பத் தாருடன் வசித்து வருகிறேன். இந்நிலையில், வாணியம்பாடி கோட்டை தெருவைச் சேர்ந்த காசிம் அகமது என்பவர் ஆட் டோவில் என்ன வருமானம் கிடைக்கப்போகிறது. அதுவே கார் வாங்கி ஓட்டினால் நிறைய வருமானம் கிடைக்கும் எனக் கூறினார்.
அதற்கு கார் வாங்க என்னிடம் பெரிய தொகை இல்லையே என்றேன். உடனே, காசிம்அகமது தொழில் தொடங்க நிறைய வங்கியில் கடன் உதவிகள் கிடைக்கின்றன. புதிய கார் வாங்க வங்கியில் நான் குறைந்த வட்டியில், மானியத்துடன் கடன் தொகை பெற்றுத் தருகிறேன் எனக் கூறினார். இதை நம்பிய நான் என் னுடைய ஆதார் அட்டை, பான் கார்டு, புகைப்படம் ஆகிய வற்றை அவரிடம் கொடுத்தேன்.
இதைத்தொடர்ந்து, காசிம் அகமது வங்கியில் விண்ணப்பம் அளிக்க வேண்டும் எனக்கூறி என்னிடம் நிரப்பப்படாத படிவங்களில் கையெழுத்து வாங்கினார். எனது கைபேசி எண்ணுக்கு ஓடிபி வரும் அதை தெரிவிக்க சொன்னார். நானும், அவர் சொன்னபடி கேட்டேன். பிறகு வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், காசோலை ஆகிய வற்றை என்னிடம் கொடுத்தார்.
பின்னர், கடன் சம்பந்தமாக காசிம் அகமதுவிடம் கேட்ட போது, வங்கியில் சமர்ப்பிக்கப் பட்ட விண்ணப்பம் மீது வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில், கார் வாங்க கடன் தொகை கிடைக்கும் எனக்கூறி வந்தார். நானும், அதை நம்பி வங்கி கடன் தொகைக்காக காத்திருந்தேன்.
இந்நிலையில், டிச.6-ம் தேதி எனக்கு பதிவு தபால் மூலம் ஒரு கடிதம் வந்தது. அதை வாங்கி பார்த்தபோது, அதில், சென்னை பெரம்பூரில் நான் புதிதாக தொடங்கிய தொழிற்சாலை வாயிலாக ஜிஎஸ்டி வரியாக 2 கோடியே 22 லட்சத்து 95 ஆயிரத்து 859 ரூபாய் பாக்கி செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி யடைந்த நான் கார் வாங்கவே பணம் இல்லாமல் வங்கி கடனுக் காக காத்திருக்கும் நான் எப்படி தொழிற்சாலை தொடங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்திருக்க முடியும். இது தொடர்பாக விசாரித்த போது எனது பான்கார்டு, ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை பயன்படுத்தி எனது பெயரில் தொழிற்சாலை தொடங்கி அதன் மூலம் ஜிஎஸ்டி மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக காசிம்அகமதுவிடம் கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்க வில்லை.
எனவே, காசிம்அகமது மீதும், அவருக்கு துணையாக இருந்த வாணியம்பாடி சலாமாபாத் பகுதியைச் சேர்ந்த தையத் புரான், சல்மான் ஆகியோரிடம் விசாரணை நடத்தி சட்டரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடத்த வாணியம்பாடி காவல் துறையினருக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours