சிவகங்கை: ‘மகாவிஷ்ணு தனது யூடியூப் சேனல் மூலம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, தமிழ்நாடு அரசு கலை கல்லூரி மாற்றுத் திறனாளி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கொ.மணிமாறன் கூறியதாவது: சென்னையில் அரசு பள்ளியில் பார்வையற்ற ஆசிரியர் சங்கரை தரக்குறைவாக மகாவிஷ்ணு பேசியுள்ளார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மாற்றுத் திறனாளிகளும் மன உளைச்சலில் உள்ளனர். மகாவிஷ்ணுவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், அவரது யூ டியூப் சேனல் மூலம் அவர் பேசிய வார்த்தைக்கு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும். இதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
+ There are no comments
Add yours