நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டாயத்தின் பேரில் 7 முறை கருக்கலைப்பு செய்ததாக அளித்த புகாரின் பேரில் நடிகை விஜய லட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்.
இதுதொடர்பாக அப்போதே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெரி சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்யவில்லை. இந்த சமயத்தில், அண்மையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் நடிகை விஜய லட்சுமி மீண்டும் புகார் அளித்திருந்தார். அதில், கடந்த 2008ம் ஆண்டு சீமான் மதுரையில் தன்னை திருமணம் செய்து கொண்டார்.
2011-இல் பணம், நகைகளை பறித்துக் கொண்டு மோசடி செய்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் 7 முறை சீமான் தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் என பல்வேறு புகார்களை விஜயலட்சுமி கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஆனால், விஜய லட்சுமி புகார்களை சீமான் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் நெருங்கி வருவதால், தன்னை தேர்தல் பணியில் இருந்து திசை திருப்பவே இந்த புகார்கள் வைக்கப்படுகிறது என குற்றசாட்டினார்.
+ There are no comments
Add yours