மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறிய பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு.!

Spread the love

சிறப்பு கூட்டத்தொடர் நேற்று நாடாளுமன்ற பழைய கட்டடத்தில் முதல் நாள் தொடங்கிய நிலையில், இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்பு கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. புதிய கட்டடத்தின் முதல் நாள் கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் இன்றே தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் முன்னரே தெரிவித்து இருந்தார்.

அதன் படி, புதிய நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும். அதன் பிறகு வேண்டும் என்றால் நீட்டித்து கொள்ளலாம் என அறிவித்தார்.

மேலும், மசோதா நிறைவேறிய பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றினால் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்றுள்ளனர்.

இருப்பினும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வராது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி 2026ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பின் மக்களவை தொகுதி மக்களவை தொகுதி நடைபெறும். மகளிருக்கு அளிக்கும் 33% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்.

மேலும், மகளிருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் தேர்தலுக்கு தேர்தல் வேறுபடும் வகையில் மசோதா வழிவகை செய்யும் என்றும் தற்போது நடைமுறையில் உள்ள எஸ்சி, எஸ்டி தொகுதி ஒதுக்கீடு மகளிர் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமுள்ள சட்டசபைகளில் குறைந்தபட்சம் 50% சட்டசபைகள் ஒப்புதல் அளித்த பிறகே சட்டம் அமலாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours