அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.! முடிவை வரவேற்பேன்.! சீமான் பரபரப்பு கருத்து.!

Spread the love

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பெரம்பலூரில் தனது கட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசுகையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி பற்றியும் , அதிமுக – பாஜக கூட்டணி பற்றியும், காவிரி நதிநீர் பங்கீடு குறித்தும் பேசினார்.

அவர் கூறுகையில், அதிமுகவானது, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினால் அதனை நான் வரவேற்பேன். அதே போல திமுகவானது காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினால் அதற்கும் வரவேற்பு தெரிவிப்போம். பாஜக – காங்கிரஸ் இந்த இரு கட்சிகளும் பெயரளவில் தான் வேறுபட்ட கட்சிகள்.

மற்றபடி, இரு கட்சிகளின் கொள்கை, கோட்பாடு , வெளியுறவு கொள்கை, மருத்துவ கொள்கை, பொருளாதர கொள்கை எல்லாம் ஒன்று தான். பெயரளவுக்கு தேசிய கட்சிகள் என கூறிக்கொண்டு, மாநில ஆட்சியின் அதிகாரத்தை பறித்து வருகின்றன. இவை இரண்டும் தேவையில்லை.

கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும், மஜாக, பாஜக, காங்கிரஸ் என யார் வந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரப்போவதில்லை. நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை ஆண்டுதோறும் கையேந்தி தான் நிற்கிறோம். அப்படி இருந்தும் அந்த கட்சிகளோடு கூட்டணி எதற்கு.

காங்கிரஸ் தேசிய கட்சியாக இருந்தாலும், கர்நாடகாவில் அந்த கட்சி மாநில கட்சியாக தான் செயல்படுகிறது. அப்படி இருக்கும் கட்சியுடன் எதற்காக கூட்டணி வைத்துள்ளீர்கள். காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு எதற்காக நடத்துகிறீர்கள், கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர் டி.கே.சிவகுமார் எல்லாம் அவர்கள் மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார்கள்.

அதே போல நீங்கள் ஏன் தமிழகத்திற்கு உண்மையாக இருக்க ஏன் மறுக்கிறீர்கள்.? நீட் தேர்வுக்கு தடையா, காவிரி விவகாரமா.? முல்லை பெரியாறு அணை விவகாரமா.? எதற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றம் தான் செல்கிறீர்கள். அப்படி இருக்கும் போது மாநில சட்டமன்றம், நாடாளுமன்றம் எதற்காக இருக்கிறது.? யார் நாட்டை ஆள்கிறார்கள், நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடந்து கடந்த கால் நூற்றாண்டில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதா.? எதுவுமே இல்லையே என கடுமையாக விமர்சித்தார் சீமான்.

மேலும், 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம் குறித்து பேசுகையில் , இது தேர்தலுக்கு, வாக்களிக்க பணம் கொடுக்கிறார்கள் என்று தனது விமர்சித்தனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பேசிய அதிமுக மூத்த நிர்வாகிகள், அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது என்று பகிரங்கமாக அறிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours