கலைஞரின் நினைவிடம் என்று கூறுவதை விட கலைஞரின் தாஜ்மஹால் என்று கூறலாம் என கருணாநிதி நினைவிட திறப்புக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் சிலாகித்தார்.
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித் துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இவற்றை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களான வைகோ, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “மிகவும் அருமை. மிகவும் அற்புதம். கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது” என்று சிலாகித்தார்.
+ There are no comments
Add yours