டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கிங்ஸ்டவுன் நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில், துவக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்களும், இப்ராஹீம் சத்ரான் 51 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பிறவீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டும் எடுத்தது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். முந்தைய போட்டியில் வங்கதேசத்துடன் ஹாட்ரிக் வீழ்த்திய கம்மின்ஸ் இன்று ஆப்கானிஸ்தானுடன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இரு முறை ஹாட்ரிக் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கனிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
+ There are no comments
Add yours