உசுடு ஏரியை நோக்கி பறந்த ஆஸ்திரேலிய பறவைகள்!!

Spread the love

புதுச்சேரியின் ஊசுடு ஏரிக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய பறவைகள் வந்துள்ளன. இனப்பெருக்கத்திற்கு கூட்டமாக வந்துள்ள பறவைகளை வேட்டையாடாமல் தமிழக-புதுச்சேரி அரசுகள் பாதுகாக்க பறவை ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரியின் மிக பெரிய ஏரி ஊசுடு ஏரி. தமிழகத்தின் வானூர் மற்றும் புதுச்சேரி உள்ளடக்கிய இந்த ஏரியில் ஆண்டுதோறும் பருவமழையின் போது வீடூர் அணை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கடல் போல் காட்சி அளிக்கும்.

இதனால் ஆயிரக்கணக்கில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் இங்கு வர துவங்கியதன் காணமாக தமிழக-புதுச்சேரி அரசுகள் இதனை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. ஆண்டுதோறும் இங்கு உள்நாட்டு பறவைகள் அதிகளவில் முகாமிட்டு இருக்கும்.

இதேபோல ஆஸ்திரேலியா இருந்து பிளமிங்கோ என்ற அரிய வகை பறவை சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் காணப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளாயபறவை புதுச்சேரி ஊசுடு ஏரிக்கு வருவதில்லை.

இந்த நிலையில் தற்பொழுது பிளமிங்கோ பறவை அதிகளவில் ஊசுடு ஏரியில் காணப்படுகிறது. காரணம் கொரோனாவுக்கு பிறகு மிக அமைதியாக பாதுகாப்பான இடமாக ஏரி மாறி உள்ளது. சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பறவைகள் மரங்கள் உள்ளன.

அதுபோல் ஏரியில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான மீன், இறால், நத்தை போன்றவை உள்ளன. இதனால் இதனை சாப்பிடுவதற்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் பிளமிங்கோ பறவைகள் புதுச்சேரிக்கு அதிக அளவில் படையெடுத்துள்ளன.

ஊசுடு ஏரி தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் பரவி கிடப்பதனால் இரு மாநில அரசுகளும் இந்த பறவைகளை வேட்டையாடாமல் தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours