புதிய உத்தியில் விலையை ஏற்றிய ஆவின்… !

Spread the love

ஆவின் நிறுவனம் பாலுக்கான விலையை மறைமுகமாக 5 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது ஆவின் நுகர்வோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் சார்பாக பால் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதில் இரண்டு முறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 37 ரூபாய்க்கும், ஒரு முறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 40 ரூபாய்க்கும் நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 44 ரூபாய்க்கும் நிறை கொழுப்பு நிறைந்த பால் லிட்டருக்கு 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

250 மி.லி, 500 மி.லி மற்றும் ஒரு லிட்டர் என்று மூன்று விதமான அளவுகளில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்து வருகின்றது. இந்த விலை மாதாந்திர ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வேறுபடும். இந்த பால் பாக்கெட்டுகளில் 250 மி.லி பால் பாக்கெட் 11.25 ரூபாய்க்கு தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே ஒரு லிட்டர் பால் பாக்கெட் விலை 45 ரூபாய் ஆகும்.

இந்த 250 மில்லி பால் பாக்கெட்டுகளில் சிறு மாறுதலை உண்டாக்கி அதன் அளவையும், விலையையும் ஆவின் நிறுவனம் குறைத்திருக்கிறது. அதாவது 250 மி.லி பாக்கெட்டுகள் தற்பொழுது 200 மிலி அளவு கொண்ட பால் பாக்கெட்டுகளாக மாறியுள்ளது. விலையும் 11.50 லிருந்து 10 ரூபாய் ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது.

இது நுகர்வோருக்கு பயன் தரும் என்று நினைத்தால் அது தவறு. தற்போது இருநூறு மி.லி பத்து ரூபாய் எனும்போது ஒரு லிட்டர் பாலின் விலை ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது. ஆகவே ஆவின் நிறுவனம் பால் பாக்கெட்டில் விலை மற்றும் அளவு குறைப்பது போல டெக்னிக்கலாக இந்த விலையேற்றத்தை செய்துள்ளது.

இது குறித்து பால் முகவர்கள் “பாலின் விலையை நேரடியாக உயர்த்துவதற்கு ஆவின் நிறுவனத்திற்கு அரசு அதிகாரம் வழங்கவில்லை. ஆனால் விற்பனை விலையை அதிகரிக்கவும் அதன் மூலமாக கொள்முதல் விலை உயர்வு நிர்வாக செலவுகளை மேற்கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த வசதியை சாதகமாக பயன்படுத்திய அதிகாரிகள் பல்வேறு வகைகளில் ஆவின் பொருட்களின் விலையை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் லிட்டருக்கு பால் பாக்கெட் விலையை டெக்னிக்கலாக 5 ரூபாய் அதிகரித்துள்ளனர்” என்று கூறியுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours