எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது: திருமாவளவன் திண்ணம் !

Spread the love

தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடு தான். எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்கள் என அனைத்திலும் அடுத்தடுத்து வெற்றியைச் சந்தித்துள்ளது திமுக. இப்பொழுது நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுள்ளது. அண்ணன் ஸ்டாலின் தொடர் வெற்றியை பெற்று வருகிறார். இதற்கு அனைத்து காரணம் அண்ணன் ஸ்டாலின் ஆளுமைதான். தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அரசியல் வரலாற்றில் இவ்வாறு தொடர் வெற்றியை பெற்ற கட்சியே கிடையாது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விட்டு சென்ற பணிகளை நாடே வியந்து பார்க்கும் வகையில் செய்து முடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா இது. மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். அதற்கு முதல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார் ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வியூகம்தான். எனவே சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

கேரளாவில் ஒரு நடிகரை வைத்து ஒரு இடத்தை பெற்றுள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடு தான். எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை

ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணிகள் மாறும் அப்படி பட்ட கூட்டணி தான் அதிமுக பாஜக கூட்டணி. ஆனால் நான்கு தேர்தல்களை சந்தித்தும் எங்கள் கூட்டணியில் சிதைவு இல்லை. கோவையில் திமுக பெற்ற வெற்றியால் இங்கு மதவெறி அரசியலுக்கு, சிறுபான்மை வெறுப்பு அரசியலுக்கு இடம் இல்லை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். இந்தியா கூட்டணி பெற்றது தோல்வில்ல, மாபெரும் வெற்றி. பாஜக பெற்றது வெற்றி அல்ல, வெற்றி பெற்றதைப் போல மாபெரும் தோல்வி

விக்கிரவாண்டியில் போட்டி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமியே அறிவித்துவிட்டார்’ என்று திருமாவளவன் பேசினார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours