சென்னை: பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை, கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்களின் சேவை நாளை (மார்ச் 3) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, நண்பகல் 12, 12,10, 12.20, 12.40, 12.50, 1, 1.15, 1.30, 2, 2.15, 2.30 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 11, 11.50, மதியம் 12.30, 12.50, 1.45, 2.15 மணி, சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல், மறுமார்க்கத்தில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.05, 11.25, 11.35, நண்பகல் 12.15, 12.45, மதியம் 1.30, 1.45, 2.15, மாலை 4.30 மணி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணி, காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9.30 மணி, திருமால்பூர்-சென்னை கடற்கரை இடையே காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளும் நாளை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.
சிறப்பு ரயில் சேவை: எனினும் பயணிகளின் வசதிக்காக நாளை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே காலை 11.55, மதியம் 12.45, மதியம் 1.25, 1.45, 1.55, 2.40, 2.55 மணிக்கும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.40, 10.55, 11.05, 11.30, நண்பகல் 12, மதியம் 1 மணிக்கும், காஞ்சிபுரம்-தாம்பரம் இடையே காலை 9.30, திருமால்பூர்-தாம்பரம் இடையே நண்பகல் 12 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மேலும், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்து சேவைகளை கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours