தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இன்று மற்றும் நாளைநடைபெறும் இந்த மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். சுமார், 450-க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், 170-க்கும்மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள், 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
விழாவில் வரவேற்று பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நாட்டிலேயே 2 வது மிகப்பெரியபொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறினார். மேலும், எலக்ட்ரானிக் வாகனங்கள் தயாரிப்பு, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மாநாட்டு விழா மேடையில், மத்திய அமைச்சருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பாராம்பரியஅடையாளமாக காளையும், வீரரும் கொண்ட சிலை வடிவ பரிசு விருந்தினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது
+ There are no comments
Add yours