மத்திய கைலாஷ்- இந்திராநகர் ரயில் நிலையம் இடையே ராஜீவ்காந்தி சாலையில் கட்டி முடிக்கப்பட்ட U வடிவ மேம்பாலத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
முன்னதாக, ராஜீவ் காந்தி சாலையில் இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் ஆகிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் அரை மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், இந்திரா நகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் ஆகிய சந்திப்புகளிலும் U வடிவ மேம்பாலங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த பணிகளுக்காக 108 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், இந்திரா நகர்ப் பகுதியில் U வடிவ மேம்பாலப் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டதால், இன்று அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. டைட்டல் பார்க் சிக்னல் அருகே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு ‘U’ வடிவ மேம்பாலம் வரும் பிப்ரவரி மாதம் திறக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
+ There are no comments
Add yours