சென்னையில் 3.9 ரிக்டரில் லேசான நிலநடுக்கம்!

Spread the love

சென்னை அருகே கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 3.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளது. திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 58 கி.மீ தொலைவில் 10.கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி செங்கல்பட்டு மகேந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் அருகே உள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மேலும், செங்கல்பட்டை அடுத்துள்ள ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடியிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.2ஆக பதிவான நிலையில், அங்கிருந்த பெரும்பாலான மக்களால் இதை உணரவே முடியவில்லை.

இந்த நில அதிர்வு ஏற்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் இப்போது சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours