சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!

Spread the love

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் செங்கல்பட்டியில் 6 தாலுகாக்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை முழுவதுமாக மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது. சென்னையின் முக்கிய சாலைகளிலும் இன்னும் கூட மழைநீர் முற்றிலும் வடியாத நிலையில், திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மழை சற்றே ஓய்ந்துள்ள போதும், அடுத்த 3 மணி நேரத்திற்கு மீண்டும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.

இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியதின் அடிப்படையில் நான்கு மாவட்டத்திற்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த தாலுகாக்களில் வெள்ளநீர் வடியாததால் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours