ஜனவரி 3-ல் தொடங்கவிருக்கும் 47-வது சென்னை புத்தக கண்காட்சி!

Spread the love

47-வது சென்னை புத்தகக் காட்சி அடுத்த மாதம் 3-ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.3-ம் தேதி மாலை 4.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். ஜன. 21-ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெற உள்ளது.

வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

தொடக்க விழாவில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொள்ள உள்ளார். ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைச்சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் இடம் பெறுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours