நடிகர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். மேலும் 72 குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட இருக்கிறது.
கோயம்பேட்டில் நடைபெறும் விஜயகாந்த் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் தா.மோ.அன்பரசன் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதி நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். தற்போது இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எல்இடி திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க ஒலிபெருக்கி மூலம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
+ There are no comments
Add yours