சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவரது பதவிக்காலத்தை வருகின்ற 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பதவிக்கால நீட்டிப்புக்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.
இவர் 55 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன், 14 கட்டுரைகளை சர்வதேச அளவில் சமர்ப்பித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டில் இந்தியாவில் வேளாண் வானிலை ஆராய்ச்சி சேவைக்கான விருது ஜெகநாதனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் இந்த பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது.
+ There are no comments
Add yours