கீழடியில் நடைபெற்று வரும் ஒன்பதாம் கட்ட அகழாய்வில் கார்னிலியன் கல்வகையை சார்ந்த இரண்டு உயர்வகை சிவப்பு கல் மணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் ஒன்பதாம் கட்ட அகழாய்வில் கார்னிலியன் கல்வகையை சார்ந்த இரண்டு உயர்வகை சிவப்பு கல் மணிகள் கண்டறியப்பட்டுள்ளது .
அகழாய்வு குழிகளில் 17.5 செ.மீ மற்றும் 20 செ.மீ ஆழத்தில் இந்த சிவப்பு மணிகள் கண்டறியப்பட்டு உள்ளது அலை அலையான வடிவம் மற்றும் கோட்டுடன் பொறிக்கப்பட்டுள்ள மணியின் நீளம் 1.4 செமீ மற்றும் அதன் விட்டம் 2 செ.மீ
இதுவரை ஒரே நிறத்தில் மட்டுமே கண்டறியப்பட்ட சூதுபவளம், தற்போது அலை அலையாக வரி வடிவத்துடனான வேலைப்பாடுகளுடன் கிடைத்துள்ளது என தமிழக தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours