சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்… காவல்துறை!

Spread the love

தீபாவளி பண்டிகையின்போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை.

தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை. அதில், சுற்றுச்சுழலுக்கு உகந்த பசுமை பட்டாசுக்கள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.

தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது என பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி அன்று காலை 6-7 வரையும், இரவு 7-8 மணி வரையும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வெடிக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும். மேலும், குடிசை பகுதி மற்றும் மாடி கட்டடங்கள் அருகே ராக்கெட்ர் போன்ற பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும் பட்டாசுகளை வெடிக்க நீளமான ஊதிவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும், பட்டாசுகளால் விபத்து நேர்ந்தால் 100, 101, 108, 112 ஆகிய எண்களை உடனே தொடர்பு கொள்ள வேண்டும். தீபாவளி தினத்தன்று சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன உணவு காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours