காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தஞ்சாவூரில் தேமுதிகவில் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தஞ்சையில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றபின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்து இரண்டு தினங்கள் தான் ஆகிருக்கு, இதனால் பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் கிடையாது. இரண்டு கட்சிகளுக்குள் பிரச்சனை இல்லை, இரண்டு தலைவர்களுக்கும் தான் பிரச்சனை.
இதனால் தான் கூட்டணி முறிந்துள்ளது. எனவே, அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதனால் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களில் உள்ளது. அப்போது, யார் தலைமையில் கூட்டணி அமைகிறது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். கண்டிப்பாக தேமுதிக ஒரு நல்ல முடிவை எடுக்கும், உரிய நேரத்தில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், இன்று 5 உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அனைவரிடமும் கருத்து கேட்கப்படும், எங்களது கோரிக்கையை கண்டிப்பாக ஆளுநரிடம் அளிப்போம் என கூறினார். எனவே, காவிரி நீதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
+ There are no comments
Add yours