தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மின்வாரிய துறையில் உள்ள கிட்டத்தட்ட 55000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்து வந்தனர் மின் ஊழியர்கள். எனினும் இதற்கு அரசு செவி மடுக்காத காரணத்தால், ஊழியர்களுக்கு, குறிப்பாக லைன்-மேன் போன்ற களப்பணியாளர்களுக்கு வேலைபளு கூடியுள்ளது.
தற்போது பருவகாலமும் நெருங்கி உள்ளதால், இப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் மின்சாரவாரிய ஊழியர்கள் இறங்கியுள்ளனர். இதனால், மின்வாரிய அலுவலகங்களில் பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது.
+ There are no comments
Add yours