பேரறிஞர் அண்ணாவிற்கு கட்சிதான் குடும்பம்.!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த உரையில், பேரறிஞர் அண்ணா தன் கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஒரே குடும்பமாக நினைத்தார் என்றும் திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பமாக இருக்கிறது என்று விமரிச்சித்து பேசினார்.

அவர் பேசியதாவது, “பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய கட்சியை சமமாக நினைத்தார் கட்சியினுடைய உறுப்பினர்களையும், தொண்டங்களையும், நிர்வாகிகளையும் ஒரே குடும்பமாக நினைத்தார். அண்ணா அவர்கள் கட்சியை குடும்பமாக பார்த்தார். ஆனால் இன்றைக்குஆனால் திமுகவிற்கு கோபாலபுரம் தான் குடும்பம். திமுக என்றால் கோபாலபுரம் என்று ஆகிவிட்டது.”

“தேர்தல் நேரத்தில் பெண்களை குறிவைத்து, பெண்களுடைய வாக்குகளை குறிவைத்து பல கவர்ச்சிகரமான திட்டங்களை ஸ்டாலின் அவர்கள் அள்ளி வீசினார். இன்றைக்கு இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடத்தில் என்ன மாற்றங்களை இந்த முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். விலைவாசியை உயர்த்த மாட்டேன் என்று பல்வேறு வாக்குறுதிகளை சொன்னார்.”

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசிற்கு மனம் இல்லை, எண்ணம் இல்லை. விலைவாசியை உயர்த்தப்பட்டதன் மூலமாக அரசுக்கு கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி கூடுதலாக வருமானம் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.50,000 கோடி டாஸ்மாக்கில் இருந்து மட்டும் கிடைக்கிறது. இது அவரது அரசுக்கு மட்டுமல்ல அவரது பினாமிகளாக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்களுக்கு கிடைக்கிறது.

“வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், பால் கட்டணம், பேருந்து கட்டணம், நில மதிப்பு, பத்திரப்பதிவு கட்டணம், பள்ளிகளில் மாணவர்களின் படிப்புக்கான கட்டணம் போன்றவை உயர்ந்து விட்டது. நாட்டில் என்ன நடக்கிறது என்று முதலமைச்சருக்கு தெரியவில்லை அவருக்கு ஒன்றுமே தெரியாத ஒரு முதலமைச்சர் ஆகதான் இருக்கிறார்.” என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் விமர்ச்சித்துப் பேசியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours