மாணவர்களுக்கு தரமான சைக்கிள் கொடுங்க – ப.சிதம்பரம் அரசுக்கு வலியுறுத்தல் !

Spread the love

தமிழகத்தில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமில்லாமல் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தரமான சைக்கிள்களை வழங்க சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியிருக்கிறார்.

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் கடந்த 2001 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. முதலில் உயர்நிலை கல்வி படிக்கும் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இருந்தது. தற்போது தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்த வேறுபாடின்றி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது தமிழகத்தில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்கள் தரமில்லாமல் இருப்பதாக மாணவர்களும், ஆசிரியர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள். சைக்கிள்கள் தரமில்லாமல் இருப்பதால், வேறு வழியில்லாமல் அவற்றை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என மாணவர்களின் பெற்றோர்களும் தெரிவித்துள்ளார்கள்.

முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் , சைக்கிள்களை தயாரித்த நிறுவனங்கள் எவை என்று கண்டறிந்து, தரமில்லாத சைக்கிள்களை திரும்பப் பெற்று தரமான சைக்கிள்களை வழங்க சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours