தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தத் தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
என் மண் என் மக்கள் என்னும் பெயரில் அண்ணாமலை மாநிலம் முழுவதும் நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே இருந்து அண்ணாமலை நடைப் பயணத்தைத் தொடங்கினார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
சந்தைக் கடை வீதிகள் வழியாக ராஜகோபால சுவாமி கோவில் வரை சென்றடைந்தனர். அங்கு வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராஜகோபால சுவாமி கோவில் முன் திறந்த வேனில் நின்றபடி பேசிய அண்ணாமலை, திருநெல்வேலியின் பெருமைகளில் ஒன்றாகவும், இரு மாவட்டங்களின் பயிர்த்தொழிலுக்கு உயிர்நாடியாகவும் விளங்கும் தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
+ There are no comments
Add yours