வாக்கு இயந்திரங்களை எடுத்து செல்லும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் !

Spread the love

தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர்வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் 101 வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரயில்வே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இது குறித்து தேர்தல் அதிகாரி கூறியது: மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்களை வாக்குப்பதிவுக்காக எடுத்துச் செல்ல ஒரு மண்டலத்துக்கு ஒரு வாகனம் என 101 மண்டலத்துக்கு 101 வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஒரு மண்டல அலுவலர், ஓர் உதவி அலுவலர், ஓர் அலுவலக உதவியாளர் என 3 நபர்களுடன், பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவலர்களுடன் வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாகனத்துடன் வாக்குப் பதிவுக்குத் தேவையான எழுது பொருள்கள், படிவங்கள், சாக்கு பைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கூடுதலாக ஒரு வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த இரு வாகனங்களும் பாதை விளக்கப்படத்தில் உள்ளபடி வாக்குப் பதிவு மையத்துக்கு சென்று வாக்குப் பதிவு மைய முதன்மை அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். 101 வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள் ளன. இந்த கருவி கட்டுப்பாட்டு அறையின் மூலம்தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours