உதகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜய லட்சுமியின் புகார் குறித்து ஆவேசமாக பேசினார். அவர் கூறுகையில், ஒரு நாள் நான் வெடித்து சிதறுவேன், அப்போது ஒருவரும் தாங்கமாட்டீர்கள். நான் உயர்ந்த லட்சியங்களை கொண்டு வருகிறேன். நீங்கள் 2 லட்சுமிகளை கொண்டுவந்து அவதூறு வீசுகிறீர்கள்.
நான் அமைதியாக இருப்பதனாலும், என்னுடைய மவுனத்தாலும் விஜய லட்சுமி புகார்கள் உண்மை ஆகாது. 13 ஆண்டுகளாக இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறேன். சமூக மரியாதை உள்ள தன்மீது அவதூறு பரப்புவதை பொறுக்க முடியாது. சமீபத்தில், சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜய லட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார்.
மேலும், போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து நீதிமன்றத்திலும் தனது வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்தார் விஜய லட்சுமி. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திக்கும் போதெல்லாம் சீமானிடம் கேள்வி எழுப்பப்படும், அப்போது அவர் ஆவேசமாக பதிலளித்து வருகிறார். அதுபோன்று, தற்போதும் இதுதொடர்பான கேள்விக்கு அரசியலில் வீழ்த்துவதற்கு எடுத்த கருவி, ரொம்ப அசிங்கமானது கேவலமானது என கொந்தளித்துள்ளார்.
+ There are no comments
Add yours