இன்று கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில் அதிமுக கூட்டணி குறித்தும், நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியினர் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
அவர் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியது போல 1.5 கோடி உறுப்பினர்கள் என்பதை 2.5 கோடியாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கொங்கு மாவட்ட பகுதி செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பூத் கமிட்டி வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும். மகளிர் அமைப்புகள், பாசறை அமைப்புகளை அதிகப்படுத்த வேண்டும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. அதோடு சட்டப்பேரவை தேர்தல் வரக்கூடும் அதற்கு தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் அவர்கள் செல்லும் ரூபாய் நோட்டாக இருப்பார்கள். அதுவே அவர்கள் எங்கள் கூட்டணியை விட்டு விலகி சென்றால் அவர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளாக மாறிவிடுவர். யார் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வருங்கால முதல்வராக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி வைப்போம். அதிமுகவை எதிர்த்தவர்கள் எதிர்காலம் சூனியமாக இருக்கும் என்றும் அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறிப்பிட்டார்.
நேற்று தான் அதிமுக – பாஜக கூட்டணி தற்போது இல்லை. எனவும் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து எங்கள் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர் கடுமையான எதிர்ப்புகளுக்கு உள்ளாவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours