கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து, ஆல்கஹால், எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த 100க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் மருத்துவமனைகளையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . மேலும் பலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த நிலையில் , கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் மரணங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்துக்கடைகளிலும் ஸ்பிரிட், சானிடைசர், ஹாண்ட் வாஷ் உள்ளிட்டவை மற்றும் ஆல்கஹால், எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருளாக இருக்கும் மருந்து பொருட்கள், சுத்தம் செய்யும் கிருமிநாசினிகளை விதிமுறைகளின்படி விற்பனை செய்ய தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அளவுக்கு அதிகமாக சானிடைசர் வாங்குபவர்களின் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் மருந்து கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
+ There are no comments
Add yours