தூத்துக்குடியில், ஆபத்தான ரசாயனத்தை எண்ணெயில் கலக்கிய KFC நிறுவனம்… வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சி.
தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல வெளிநாட்டு நிறுவனமான KFC சிக்கன் நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன பழைய எண்ணெய்களைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பழைய எண்ணையை சுத்திகரிக்க மெக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்ற ரசாயனத்தை பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிகேட் ரசாயனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு சமைக்க முடியாத கெட்டுப்போன 45 லிட்டர் பழைய எண்ணை, 12 மணி நேரத்துக்கு மேலாக பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்த 56 கிலோ சிக்கன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து உணவகத்திற்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக அதிகாரிகள் ரத்து செய்தனர். மறு உத்தரவு வரும் வரை உணவகத்தை திறக்கக் கூடாது எனவும் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours