2 நாட்கள் மூடப்படும் மதுக்கடைகள் !

Spread the love

மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 4,800 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை இயங்குகிறது. இந்த நிலையில் மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 28ம் தேதி இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படவுள்ளது. இதேபோல் காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு செப்டம்பர் 28ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி ஆகிய இந்த இரண்டு நாட்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் தமிழக அரசு என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours