மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக இன்று சென்னை வந்தடைந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதம் வன்முறையாக வெடித்துள்ளது.
இதனால் கடந்த 3 மாதங்களாக அந்த மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை மணிப்பூரில் நிலவுவதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று தமிழகத்தில் பயிற்சி பெற 15 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள் – 5 வீராங்கனைகள் – 2 பயிற்சியாளர்களை விமானம் மூலம் இன்று சென்னைக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைத்து வந்தது.
+ There are no comments
Add yours