கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகளை தமிழ் நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பவ்டா கல்லூரி – குழியாலங்கோணம் வரை இண்டர்லாக் சாலை அமைக்க ரூ.41.40 லட்சமும், தாழபிடாகை, ஐந்தியாலம் மற்றும் சிறக்குளம் ஆகிய பகுதிகளில் இண்டர்லாக் அமைக்க ரூ.81 லட்சம் மதிப்பிலான பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
இதையடுத்து திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட கோட்டூர்கோணத்தில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் திங்கள் நகர் பணிமனையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று குளிரூட்டப்பட்ட ஓய்வறையையும் அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
+ There are no comments
Add yours