திருச்சி எஸ்பி மீது, நாம் தமிழர் கட்சியினர் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் !

Spread the love

சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினரால் தனது குடும்பத்தினர் இணையதள அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் அக்கட்சி கண்காணிக்கப்பட வேண்டியது எனவும் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியிருந்த நிலையில் தற்போது அவர் மீது தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

திருச்சி மாவட்ட எஸ்பியாக வருண்குமார் ஐபிஎஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நிலையில் கடந்த ஜூலை பதினோராம் தேதி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரை எடுத்து நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவத்திற்கு பிறகு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எஸ்.பி. வருண்குமார் சாதிய பாகுபாடு பார்ப்பதாக குற்றம் சாட்டியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சசம்பவத்திற்கு பிறகு எஸ்.பி. வருண்குமாரை கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது.

இதனை எஸ்பி வருண்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கண்டித்து கருத்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தில்லைநகர் காவல் நிலையத்தில் எஸ்பி வருண்குமார் புகார் அளித்தது அடுத்து 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சண்டிகரில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான திருச்சி எஸ்பி வருண்குமார் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி. வருண்குமார் தமிழகத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருப்பது போல இணையதளங்கள் வாயிலாக பெண்களுக்கு எதிரான குற்றச்செய்தல் ஈடுபடுவதாகவும், நாம் தமிழர் இயக்கம் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவான இயக்கம் யாவும் குற்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக தன்னையும் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் தன் மனைவி மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாகவும் இவை அனைத்தும் வெளிநாடுகளில் இருப்பவரை வைத்து செய்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உலகம் முழுவதும் உள்ளதாகவும், பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் அந்த இயக்கத்தை சேர்ந்தோரையும் இது மாதிரியான இயக்கங்களையும் சைபர் கிரைம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பேசி இருந்தார் இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours