சென்னையில் பழமையான கார் கண்காட்சி… !

Spread the love

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற புராதன கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகன கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

சென்னை ஒ எம் ஆர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஹெரிடேஜ் கார்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் பழமை யான, புராதனமான கார் மற்றும் இருசக்கர வாகன கண்காட்சியை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப்பு தொடங்கி வைத்தார். இன்று முழுவதும் பொதுமக்கள் இலவசமாக கார் கண்காட்சியை கண்டு களிக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, நாளை காலை 7 மணி அளவில் இங்கிருந்து பேரணியாக பழமையான கார்கள் புறப்பட்டு புதுச்சேரி சென்று அங்கு கடற்கரை, பள்ளி , கல்லூரிகளில்,கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

கண்காட்சியில் 1926 முதல் 1980 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராயஸ், ஜாக்குவார், எம்ஜி. டார்ஜ், செவர்லெட், ஃபோர்டு, பியுசியட், ஆஸ்டின் மற்றும் மெர்சடஸ் பென்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற கார் நிறுவனங் களின் கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடக,கோவா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியில், மொத்தம் 50க் கும் மேற்பட்ட கார்களும், 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங் களும் காட்சிக்கு நிறுத்தப்பட் டிருந்தன.

விடுமுறை தினம் என்பதால் பலர் குடும்பத்துடன் வந்து கார்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும், ஆர்வமுடன் கார்கள் குறித்த தகவல்களையும் கேட்டறிந்தனர்.ஏராளமானோர் ஆர்வமுடன் கண் காட்சியைக் கண்டு ரசித்து வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours